கவலையினால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை எப்படி போக்கலாம்?


வாழ்க்கையில் கவலை இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே கவலையாக இருந்தால் எப்படி என்று ஒரு சிலர் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

கவலை என்பது ஒரு மனிதனுக்கு வரும் சாதாரண ஒரு உணர்வு, ஆனால் கவலையினால் ஏற்படக்கூடிய

அசௌகரியத்தன்மையும்,பதற்றமும் ஒருமனிதனை முன்னேற விடாமல் வீழ்த்திவிடக்கூடியவை. இவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை

முதலாவதாக எல்லா மனிதர்களுமே வாழ்வின் முழுமையை மகிழ்ச்சியாக கழித்துவிடுவதில்லை.கவலைகள் மன அழுத்தங்கள் வருவது வாழ்க்கையின் ஒரு பகுதி என ஏற்றுக்கொள்ளுதல்.

கவலை மற்றும் பதற்றத்தன்மை கட்டுப்படுத்தக்கூடியதும் மற்றும் கையாளக்கூடியதுமே ஆகும்.சரியான தற்பராமரிப்பு மற்றும் ஒரு சில மருத்துவ முறைகளை கையாண்டு இவற்றை தவிர்க்கமுடியும்.

கவலையும் பயம் கலந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்களை பார்ப்பது யோசிப்பதை கட்டுப்படுத்தல் ஒரு மிகசிறந்த வழியாகும்.திரும்பி திரும்பி அவற்றை செய்யத்தோணுமிடத்து நீங்கள் மனதை திசைதிருப்பும் வேறு விதமான பொழுதுபோக்கு அல்லது வேளைகளில் கவனம் செலுத்துவது சிறந்தது.

கவலையினால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை எப்படி போக்கலாம்? | How Can Overcome The Discomfort Caused By Anxiety

பயத்தை கையாளும் முறை

ஒரு உதாரணமாக உங்களுக்கு விமானத்தில் செல்லுதல் பயம் என்றால் அந்த பயத்தை வெளிப்படுத்தும் செயற்பாடுகள் செய்தல்,உதராணத்திற்கு பறத்தல் சம்பந்தமாக புத்தகங்களில் வாசித்தல் காணொளிகளை பார்த்தல் போன்று சிறு செயல்கள் மூலம் பயத்தை கையாளுதல்

நினைவாற்றல் செயல்முறை

இச்செயன்முறையானது இப்பொழுது ஒரு விடயம் நடக்கிறது என்றால் அதிலே மட்டுமே கவனம் செலுத்தும் வண்ணம் உங்களுக்கு தோன்றும் சிந்தனைகள் மற்றும் நினைவுகளை பொருட்படுத்தாதுவிடுதல்.இதன் மூலம் தேவையற்ற சிந்தனைகளை யோசிக்கும் சக்தி இழக்கப்பட்டு எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் இருக்க செய்கிறது.

தியானம்,ஆழ்ந்த சுவாசம் மற்றும் யோகா பயிற்சிகளை செய்வதன் மூலமாக நினைவாற்றல் பெறுகிறது அத்தோடு நேர்மறை எண்ணங்களை தூண்டுகிறது.இவ்வாறான எதிர்மறை எண்ணங்களை தடுப்பதற்கு அடுத்து சிறந்த வழி உடற்பயிற்சி

உடற்பயிற்சிகளில் கவனத்தை செலுத்துதல் மூலம் உடல் வலிமை பெறுகிறது.இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் தேவையற்ற சிந்தனைகளை யோசிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.

ஆரோக்கியமான உணவு முறைகள்,உடன் உணவுகளை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை நடைமுறைக்கு கொண்டுவருதல்.

கவலையினால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை எப்படி போக்கலாம்? | How Can Overcome The Discomfort Caused By Anxiety

போதுமான அளவு உறக்கமின்மை

தூக்கமின்மை மன அழுத்தத்திற்கான,சோர்வுக்கான முக்கிய காரணியாக இருக்கிறது.போதுமான உறக்கம் மற்றும் ஓய்வு உடலுக்கு கிடைக்குமிடத்து மனச்சோர்வை தடுக்கமுடியும்.

உங்களுக்கென்றே பொழுதுபோக்கு ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள்,தவறாமல் அதில் ஈடுபடுங்கள்.

மற்றவர்களுடன் வலுவான ஒரு உறவை பேணுவதன் மூலமும் இதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

இவ்வாறான செயற்பாடுகளை தினசரி செய்வதன் மூலம் இவ்வாறான கவலை,பதற்ற உணர்வுகளை தவிர்க்கமுடியும்.

   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.