இந்தியாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த DJ இசையின் அலறல் சத்தம் தாங்க முடியாமல் மணமகன் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் அலறிய DJ இசை
இந்தியாவின் புகார் மாநிலத்தில் உள்ள சீதாமார்ஹி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் சிறப்பு கொண்டாட்டமாக DJ இசை கச்சேரி இடம்பெற்று இருந்தது.
ஆனால் கொண்டாட்டத்தில் DJ இசை கச்சேரியின் சத்ததை கேட்க முடியாமல் மணமகன் சுரேந்திர குமார்(22) உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
India Today
மணமகன் சுரேந்திர குமார் DJ இசை கச்சேரியின் சத்தம் தொந்தரவாக இருப்பதாக கூறியும் ஒலியின் அளவு குறைக்கப்படவில்லை.
இதனால் சுரேந்திர குமாருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
பின் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
