திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம், இடைச்சிவிளையை சேர்ந்த பாலகிருஷ்ணனின் தோட்டத்தில் கோழிப்பண்ணையும், வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையும் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை உடன்குடி ராஜ்குமார் (34) என்பவர் கெமிக்கல் கலவை செய்து கொண்டிருந்தார்.
திடீரென பயங்கர சத்ததுடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் தரைமட்டமானது. ராஜ்குமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு, உடல் கருகி உயிரிழந்தார். மற்றொரு கட்டிடத்தில் இருந்த பாலன் தலையில் செங்கல் மோதி காயம் ஏற்பட்டது.