தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வட மாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வட மாநிலத் தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதாக வரும் செய்தி குறித்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் “வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை.
இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராக இருந்தாலும் திருட்டு ரயிலை ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை” என பதிவிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரியின் இத்தகைய பதிவு இணையதளத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அதை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் வெளி மாநிலதத்தை சேர்ந்த தலைவர்கள்தான் என்பதை கூறும் வகையில் அவருடைய பதிவு அமைந்துள்ளதால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 4, 2023