இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளை ஒன்று ஹோலி பண்டிகை. அந்த வகையில் இந்த ஆண்டு ஹோலி வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை பனி காலத்திற்கு விடையளித்து வெயில் காலத்தை வரவேற்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
குளிர்காலங்களில் இருந்து வெயில் காலம் மாறுவதை வசந்த காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பருவநிலை காலம் மாற்றத்தால் நுண்ணுயிரி சார்ந்த காய்ச்சல் சளி போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

குறிப்பாக இந்த பண்டிகை வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில் கோவையில் இருந்து நாளை இரவு 8.45க்கு புறப்படும்சிறப்பு ரயில் மார்ச் 7ஆம்தேதி காலை 7மணிக்கு பாட்னா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா வழியே பாட்னா சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.