புதுடில்லி: புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, டில்லி விமான நிலையத்திற்கு இன்று( மார்ச் 5) அதிகாலை சர்வதேச விமானம் ஒன்றில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், விமானத்தில் கழிவறையில், பவுச் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 தங்க கட்டிகள் சிக்கியது.
செவ்வக வடிவிலான இந்த தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.1,95,72,400 ஆகும் எனக்கூறியுள்ள அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement