Ajith: ஏ.கே. 62 படத்திற்காக மகிழ்திருமேனிக்கு பிரஷர் கொடுக்கும் அஜித்?

Ajith kumar’s advise to Magizh Thirumeni: ஏ.கே. 62 படத்திற்காக மகிழ்திருமேனியை அஜித் குமார் அவசரப்படுத்துவதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

ஏ.கே. 62அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டார் விக்னேஷ் சிவன். ஆனால் கடைசி நேரத்தில் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அஜித்அஜித் குமார் தன் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் ஏ.கே. 62 பட வேலையை சீக்கிரமாக துவங்கி, சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று மகிழ்திருமேனியை அவசரப்படுத்துவதாக கூறப்பட்டது. ஆனால் மகிழ் திருமேனியிடம் அஜித் குமார் அப்படி எதுவுமே சொல்லவே இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

ஏ.கே.ஏ.கே. 62 படம் தரமானதாக இருக்க வேண்டும். அதனால் அவசரப்பட்டு வேலையை முடிக்க வேண்டாம். சில மாதங்கள் கூடுதலாக ஆனாலும் பரவாயில்லை, படம் நன்றாக வர வேண்டும். அதனால் பொறுமையாகவே படப்பிடிப்பை நடத்துங்கள். என் உலக சுற்றுப்பயணத்தை நான் தள்ளிப் போட்டுக்கொள்கிறேன் என மகிழ்திருமேனியிடம் கூறியிருக்கிறாராம் அஜித் குமார்.
ரசிகர்கள்ஏ.கே. 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக விக்னேஷ் சிவனை நீக்கியதால் அஜித் படத்தில் இருந்து விலகிவிட்டார் அனிருத் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை. ஏ.கே. 62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்பொழுது வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
லைகாபெரிய அறிவிப்பு வருகிறது என லைகா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்தது. இது கண்டிப்பாக ஏ.கே. 62 பட அறிவிப்பாகத் தான் இருக்கும் என அஜித் ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தை ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைப்பார் என அறிவித்தது லைகா. அதை பார்த்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

​Thalaivar 170: ரஜினியின் தலைவர் 170 படத்தை இயக்கும் ஜெய்பீம் ஞானவேல்: கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்

காஜல் அகர்வால்AK62:த்ரிஷா, நயன்தாரா வேண்டாம், காந்தக் கண்ணழகியை அஜித் ஜோடியாக்கும் லைகா?
ஏ.கே. 62 படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாமே என லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறதாம். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அந்த படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.