Silk Smitha: ஷூட்டிங் இல்லைனா என் வீட்டில் தான் இருப்பார் சில்க், எங்கு பார்த்தாலும் கட்டிப்பிடிப்பார்: கங்கை அமரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சிக்கு பெயர் போன சில்க் ஸ்மிதாவின் கண்களே கதை பேசும் என்பார்கள்.

அவர் கண்களில் சொக்குப்பொடி வைத்திருந்தார் என்பார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதா கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தியில் தி டர்ட்டி பிக்சர் படத்தை எடுத்து வெளியிட்டார்கள். அதில் வித்யா பாலன் தான் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார்.

தி டர்ட்டி பிக்சர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படம் வித்யா பாலனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சில்க் ஸ்மிதா பற்றி கங்கை அமரன் கூறியதாவது,

சில்க் ஸ்மிதாவும், நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம். படப்பிடிப்பு இல்லை என்றால் உடனே எனக்கு போன் செய்து உங்கள் வீட்டிற்கு வரட்டுமா என்று கேட்டுவிட்டு வருவார்.

என் மனைவியுடன் சேர்ந்து சமையல் செய்து சாப்பிட்டு சந்தோஷமாக நேரத்தை செலவிடுவார். அப்பொழுது பிரேம்ஜி அமரன் ரொம்ப சின்ன பையன். அவனை பார்த்து இவனை நான் கல்யாணம் பண்ணிக்கட்டுமா என்று கேட்பார்.

நானும் ஓகே கல்யாணம் பண்ணிக்கோனு சிரிப்பேன். என்னை எங்கு பார்த்தாலும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொள்வார் சில்க். அவர் என்னை மச்சான் என்று தான் கூப்பிடுவார். சில்க் ஸ்மிதா அந்த அளவுக்கு நெருங்கிப் பழகினார்.

அவரை பார்த்தால் கிராமத்து பெண் போன்றே தெரியாது. கிராமத்தில் இருந்து வந்த போதிலும் ஆடை விஷயத்திலும், அலங்காரத்திலும் தன்னை ரசித்து ரசித்து மெருகேற்றினார். அவரை போன்று செய்ய வேறு யாராலும் முடியாது.

தன்னை மெதுவாக செதுக்கி செதுக்கி சினிமாவுக்காக படைக்கப்பட்டவள் போன்று மாறினார். சில்க் திடீர் என்று இறந்த செய்தி அறிந்து என்னால் அதை தாங்க முடியவில்லை. காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுத்துட்டேன் என்றார்.

கங்கை அமரன் கூறியதை கேட்டவர்களோ, ஒரு வேளை சில்க் ஸ்மிதாவை மனதில் வைத்துக் கொண்டு தான் பிரேம்ஜி அமரன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறாரோ என கிண்டல் செய்கிறார்கள்.

பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் அடிக்கடி கேள்வி கேட்கிறார்கள். அந்த கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. புத்தாண்டிற்கு கூட தான் அருந்திய மது பாட்டிலின் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் பிரேம்ஜி.

Premgi Amaren:காஸ்ட்லி காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய பிரேம்ஜி: எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா?

இப்படியே பாட்டிலும் கையுமாக இருந்தால் யாரும் பெண் கொடுக்க மாட்டாங்க பிரேம்ஜி. குடிக்க வேண்டாம்னு சொல்லவில்லை. குடிப்பதை இப்படியா பப்ளிக்காக சொல்வது என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

நல்ல அடக்கமாகன, பயபக்தியான, கோவிலும் வீடுமாக இருக்கும் பெண்ணாக வேண்டுமாம் பிரேம்ஜிக்கு.

Ajith: ஏ.கே. 62 படத்திற்காக மகிழ்திருமேனிக்கு பிரஷர் கொடுக்கும் அஜித்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.