புதுடில்லி : பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது.
இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணை, கப்பல், விமானம், நீர் மூழ்கி கப்பல் மற்றும் தரை வழியாக என பல நிலைகளில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய கடற்படை அரபி கடல் பகுதியில் நேற்று நடத்திய சோதனையில், ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுஏப்ரலில், வங்க கடல் பகுதியில் அந்தமான் கமாண்டோ பிரிவுடன் இணைந்து இந்திய கடற்படை பிரமோஸ் ஏவுகணை சோதனையை நடத்தியது. பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதியும் செய்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement