
தனது முன்னாள் மனைவி வைத்த தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்கி நீண்ட கடிதம் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக்கி தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இவருக்கென இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தும் இவர் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அஞ்சனா பாண்டே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அஞ்சனா தனது பெயரை ஆலியா சித்திக் என மாற்றிக் கொண்டார். கருத்து மோதல் காரணமாக 2020இல் விவகாரத்து பெற்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள்.

நவாசுதீன் சித்திக்கி தன்னை கொடுமைப் படுத்துவதாக ஆலியா தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதற்கு நீண்ட கடிதம் மூலம் நவாசுதீன் விளக்கம் அளித்துள்ளார். அதில், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தாம் தொடர்ந்து அமைதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகள் மாதம் 10 லட்ச ரூபாய் வீதம் ஆலியா தன்னிடம் பணம் பெற்றுள்ளதாக கூறியுள்ள நவாசுதீன், அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்ததாகவும், அவருக்குக் கொடுத்த ஆடம்பர காரை விற்று அதில் கிடைத்த பணத்தையும் செலவழித்துள்ளார் என கூறியுள்ளார்.

அவருக்குப் பணம் மட்டுமே தேவை. தற்போது குழந்தைகளை துபாயில் இருந்து இங்கு அழைத்துவந்து பணம் கேட்க வேண்டும் என்பதற்காக பிரச்னை செய்கிறார். அவர் தனது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்து வருகிறார் என நவாசுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
newstm.in