போர் நெருக்கடியில் இருந்து தப்பிய உக்ரேனிய சிறுமி… பிரித்தானியாவில் நேர்ந்த துயரம்


பிரித்தானிய கடற்கரை ஒன்றில் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்த பள்ளி மாணவி உக்ரைன் அகதி என தெரிய வந்துள்ளது.

உக்ரைன் அகதி

குறித்த சிறுமி பிரித்தானிய குடும்பம் ஒன்றுடன் தங்கி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெவோன் பகுதியில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை மதியத்திற்கு மேல் டெவோன் கடற்கரையில் அவர் சுயநினைவின்றி மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, ஹெலிகொப்டர் மூலமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிசார் தெரிவிக்கையில்,

போர் நெருக்கடியில் இருந்து தப்பிய உக்ரேனிய சிறுமி... பிரித்தானியாவில் நேர்ந்த துயரம் | Ukrainian Refugee Schoolgirl Died On Beach

@getty

முறையாக அடையாளம் காணப்பட்டதுடன் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் இருந்து தாயாருடன் அந்த சிறுமி பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்.

டெவோன் கடற்கரையில்

இந்த இருவரும் உள்ளூர் குடும்பத்தின் ஆதரவில் தங்கி வந்துள்ளனர்.
மார்ச் 4ம் திகதி சனிக்கிழமை மாலை டெவோன் பகுதியில் இருந்து 14 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து உள்ளூர் மக்கள் மற்று பொலிஸ் ஹெலிகொப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும்,

இந்த நிலையில் டெவோன் கடற்கரையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமி உக்ரேன் நாட்டவர் என்பதால், அந்த நாட்டு தூதரகத்திற்கும் பிரிட்டன் உள்விவகார அமைச்சகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.