#சேலம் | பணக்கார வீட்டு பையன்! புதிய யுக்தியை கையாண்ட நாடக காதல் கும்பல்! வசமாக சிக்கியது எப்படி?!

பணக்காரர் வீட்டு பையனின் போட்டோவை கல்லூரி மாணவியுடன் ஆபாசமாக சித்தரித்து, பணம் பறிக்க முயன்ற நாடக காதல் கும்பல் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளது.

பணக்கார வீட்டு பொண்ணை காதல் வலையில் வீழ்த்தி காசு பறித்து வந்த நாடக காதல் கும்பல், தற்போது பணக்கார வீட்டு பையனை ஆபாசமாக சித்தரித்து, அதுவும் சொந்த மகளின் புகைப்படத்தோடு சித்தரித்து காசு பறிக்க முயன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் : ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ் குமார், இவர் வாழப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சங்ககிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் இவர்களின் மகன் நீட் பயிற்சிக்காக செல்லும்போது, ஸ்டிக்கர் கடை உரிமையாளர் உதயகுமார் என்பவருடன் நண்பராக அறிமுகம் ஆகியுள்ளார்.

வசதி படைத்த மாணவனின் பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க உதயகுமார் திட்டமிட்டு, இதற்காக தன் கடையில் பணிபுரிந்த கார்த்திக், ஞானசேகரன் ஆகிய இருவருடன் சேர்ந்து, சமூக வலைத்தளத்தில் இருந்த மாணவனின் புகைப்படத்தை எடுத்து, கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்துடன் இணைத்து ஆபாசமாக மார்பிங் செய்துள்ளனர்.

அந்த கல்லூரி மாணவியின் தாயின் துணையோடு, நேராக மாணவனின் தந்தையிடம் இந்த புகைப்படத்தை காட்டியுள்ளனர். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்பதை அறிந்து கொண்ட மருத்துவர், உதயகுமார் தலைமையிலான இந்த கொள்ளை கும்பலை விரட்டி அடித்துள்ளார்.

அப்போது அந்த உதயகுமார் தலைமையிலான கொள்ளை கும்பல் இந்த புகைப்படத்தை வெளிவிடாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். 

மேலும், மருத்துவர் ரமேஷ்யை வீட்டில் சந்தித்த கார்த்திக், ஞானசேகரன் மிரட்டல் விடுக்கவே, மருத்துவர் ரமேஷ் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

விரைந்து வந்த போலீசாரிடம் அனைத்து விவரங்களையும் மருத்துவர் ரமேஷ் கூறியதன் பேரில், கார்த்திக், ஞானசேகரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு, இரண்டு பேரையும் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள மாணவியின் தாய் மற்றும் உதயகுமார் ஆகியோரை தேடி  போலீசார் வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.