சென்னை: ரூ.430 கோடி மதிப்பில் சென்னையில் 372 கழிவறைகள் கட்ட தனியாருக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி பிப்ரவரி 23ந்தேதி வெளியிட்ட தகவலின்படி, ரூ.430.11 கோடி மதிப்பில் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் பொதுக் கழிவறைகள் கட்டப்படவுள்ளதாகவும்,. சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, மொத்தம் […]