புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, இரவல் கவர்னர் வேண்டாம் என கோஷமிட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) தொடங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் […]
