இசைஞானி இளையராஜா இசையமைத்த பல்வேறு படங்களில் பணியாற்றிய இசைக்கலைஞர் சந்திரசேகர் இன்று காலமானார். கிட்டார் இசைக்கலைஞரான இவர் இளையராஜா இசையமைத்த ‘இளய நிலா பொழிகிறதே’ உள்ளிட்ட பல பாடல்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியுள்ளார் சந்திரசேகர். சந்திரசேகர் மற்றும் அவரது இளைய சகோதரர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் இருவரும் இளையராஜாவின் பல படங்களில் பணியாற்றியுள்ளனர். Rest in peace, Chandrashekar sir. A brilliant […]