நீலகிரி: உதகை உருது பள்ளியில் போட்டி போட்டு சத்து மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகளவு சத்து மாத்திரைகள் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 6-ம் தேதி 4 பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கோவை மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் மாணவி உயிரிழந்துள்ளார்.