
உலகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த அவதார் 2 திரைப்படம், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது அளிக்கும் விழா, அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.
2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அவதார் திரைப்படத்தின் 2ம் பாகமான ‘Avatar: The Way of Water’ திரைப்படம் 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.
விசுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் நிறைந்த படம், வெளியாகி 3 மாதமாகியும் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது.