சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் இன்று வெப்பநிலை அதிகபட்சமாக 96 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக பதிவாகியுள்ளது. நாமக்கல், புதுச்சேரி, சேலம், ஆகிய இடங்களில் இன்று வெப்பநிலை தலா 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக பதிவாகியுள்ளது.
