வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புலனாய்வு அதிகாரிகளினால் 24 பேர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளினால் சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக, குற்றவாளிகளை தராதரம் பாராது கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய 2023 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம்  13 பேரும், பெப்ரவாரி மாதத்தில் 11 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதற்கமைய இவ்வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளில் 12,637,500 ருபா அறவிட்டு முறைப்பாட்டாளர்களுக்கு வழக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக சட்டவிரோத முகவர் நிலையங்களுக்கு மற்றும் இடைநிலை தரகர்களிடம் ஏமாந்து  பணம் வழங்க வேண்டாம் என்று பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்து போனவர்கள் இருப்பின் , பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் 011  286 4241 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பணியகம்; கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.