Rajinikanth:நான் இருக்கேன், பார்த்துக்கிறேன்: கஷ்டப்படும் பிதாமகன் தயாரிப்பாளருக்கு ரஜினி உதவி

விஜயகாந்தின் கஜேந்திரா, சூர்யா, விக்ரம் உள்ளிட்டோர் நடித்த பிதாமகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் வி.ஏ. துரை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பாபா படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு துரையின் நிதி நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் எலும்பும், தோலுமாக ஆகிவிட்டார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரை.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நண்பர்கள் தான் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் தொடர்ந்து சிகிச்சை கொடுக்கும் அளவுக்கு அவர்களிடமும் பணம் இல்லை. இதையடுத்து துரையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இந்நிலையில் மருந்து, மாத்திரை வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் துரை. அவரின் நிலையை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

துரை பற்றி அறிந்த சூர்யா உடனடியாக ரூ. 2 லட்சம் கொடுத்திருக்கிறார். மேலும் நடிகர் கருணாஸும் ரூ. 2 லட்சம் கொடுத்தாராம். துரையின் செய்தி அறிந்த நடிகரும், இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் ரூ. 5 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இதற்கிடையே ரஜினி என் நீண்டகால நண்பர். அவருக்கு மட்டும் என் நிலைமை பற்றி தெரியவந்தால் நிச்சயம் உதவி செய்வார் என்று கூறியிருக்கிறார் துரை. அவர் பேசியது ரஜினியின் காதுகளை எட்டியது.

உடனே துரைக்கு போன் செய்து, எப்படி இருக்கீங்க என நலம் விசாரித்திருக்கிறார் ரஜினி. மேலும் நீங்கள் எதற்கும் கவலைப்படாதீங்க, நான் இருக்கிறேன். நான் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன் என்று ஆறுதலாக பேசினாராம். ரஜினி சொன்னதை கேட்டு துரை நம்பிக்கையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

உதவி என்று யார் கேட்டு வந்தாலும் உடனே செய்பவர் தலைவர். அப்படி இருக்கும்போது அவர் துரைக்கு உதவி செய்ய முன்வந்ததில் ஆச்சரியம் இல்லை. இது தான் தலைவரின் தாராள குணம் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Mayilsamy: இறந்த மயில்சாமி மீது சிங்கமுத்து பரபர குற்றச்சாட்டு: ரசிகர்கள் ஆதரவு

இதற்கிடையே ராகவா லாரன்ஸையும் சினிமா ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மனுஷன்ட உதவி கேட்க வேண்டியதே இல்லை, யாருக்காவது பணம் தேவைப்படுகிறது என்று தெரிய வந்தாலே தானாக முன்வந்து லட்சங்களில் உதவி செய்கிறார். அவர் மேலும் மேலும் நன்றாக இருக்க ஆண்டவன் அருள்புரிய வேண்டும் என ரசிகர்கள் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.