அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அரியலூர் மாவட்டத்தில் 70 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கின்ற சாத்தனூர் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக எழுத்தாளர் பணியை வாங்கி தருவதாக கூறி பிரகாசம் என்ற நபரிடம் ரூ.50000 பெற்றதாக புகார் எழுந்தது.
குணசேகரன் முதலில் தற்காலிகமாகவும் அதன் பின், நிரந்தரமாகவும் அரசு வேலை வாங்கி தருவதாக பிரகாசம் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரிடமும் இதுவரை ரூ.69,35,000 லட்சம் ரூபாயை வாங்கி உள்ளார்.
அத்துடன் அவர்களுக்கு போலி அரசு பணி நியமன ஆணைகளை அவரே உருவாக்கி கொடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பிரகாசம் குணசேகரனிடம் கேள்வி எழுப்பிய போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரகாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசாரால் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.