வாஷிங்டன்,ஜார்க்கண்டின் ஜஹாரியா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து, மீத்தேன் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அமெரிக்கா ஆணையம் நிதி உதவி அளித்துள்ளது.
எரிசக்தி பயன்பாட்டுக்கும், மாற்று எரிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய மீத்தேன் வாயு, நம் நாட்டின் ஜார்க்கண்டில் அபரிமிதமாக காணப்படுகிறது.
இந்நிலையில், நம் நாட்டில் உள்ள ‘பிரபா எனர்ஜி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்துடன், அமெரிக்காவின் வணிக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து, ஜார்க்கண்டின் ஜஹாரியா நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் எரிவாயுவை கண்டறியும் பணியை மேற்கொள்ள உள்ளது.
நவீன தொழில்நுட்ப உதவியுடன், இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள நிலையில், இதற்காக நிதி ஒதுக்கீடும் செய்ய அமெரிக்க நிறுவனம் முன்வந்துள்ளது.
மேலும், இயற்கையை பாதிக்காத வகையில் மீத்தேன் எரிவாயுவை கண்டறிந்து, எரிசக்தியை உற்பத்தி செய்ய உதவப்போவதாகவும் அறிவித்துள்ளது.
நம் நாட்டில் மீத்தேன் குறித்து ஆய்வு நடத்துவதற்காக, அமெரிக்க நிறுவனம் ஒன்று நிதியுதவி அளிப்பது இதுவே முதல் முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement