மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டம் உதவிகள்

பொன்னேரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய மற்றும் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.   திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா நேற்றுமுன்தினம் ஏலியம்பேடு, கூடுவாஞ்சேரி, காட்டவூர், அரசூர், ஏறுசிவன், பெரும்பேடு ஆகிய ஊராட்சிகளில் நடந்தது. இந்த ஊராட்சிகளில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் நரசிங்க மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, அனைத்து ஊராட்சிகளிலும்  திமுக கொடி  ஏற்றி கல்வெட்டுகளையும் திறந்து வைத்து,  இனிப்புகள்  வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு சேர், டேபிள், நோட்டு, பேனா என இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.

இந்த விழாவில் ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங், ஸ்டாலின், முனுசாமி, குணாளன், பார்த்தசாரதி, குமார், தேசராணி தேசப்பன், தினேஷ், வெற்றி ராஜேஷ்,  பழனி, ஜெகன்,  வேலு, இளஞ்செல்வி பார்த்திபன்,  பொன்னேரி இளங்கோ,  வக்கீல் ராதாமணவாளன், ஆதி, பார்த்திபன்,  உமாபதி, சண்முகம், தன்ராஜ், சரவணன்,  கோமளா, நிர்மலா, வெற்றிச்செல்வி, துரை, தேவராஜ், நேதாஜி, காட்டூர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்  முதல்வர் பிறந்த தின விழா மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறு ஊராட்சிகளில் நேற்று கேக்கு வெட்டி கொண்டாடப்பட்டது. இதில்,  ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் திமுக  முன்னோடிகளுக்கு வேட்டி, சேலை ஆகியவைகளும் வழங்கினார்.  

இவ்விழாவில் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் கே. ஜி பாஸ்கர் சுந்தரம், தடப்பெரும்பாக்கம் அவைத்தலைவர் ராஜா,  கட்சி நிர்வாகிகள் சிறுவாக்கம் இந்திரா சங்கர், ரவிச்சந்திரன், வன்னிப்பாக்கம் முரளி, வாசு நாயுடு நாலுர் சங்கர், குடியரசு, சுப்பா ரெட்டிபாளையம் மூர்த்தி, கோவிந்தராஜ் நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, நந்தியம்பாக்கம் தொழிலதிபர் கார்த்திக், வடசென்னை அனல் மின் நிலைய மின்வாரிய சங்க பொறுப்பாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.