உலகின் முதல் வான் பாதுகாப்பு போர் கப்பல்: ஈரான் வெளியிட்டுள்ள முதல் வீடியோ


உலகின் முதன் வான் பாதுகாப்பு அமைப்பு கொண்ட படகை ஈரான் வெளியிட்டுள்ளது.

உலகின் முதல் வான் பாதுகாப்பு படகு

ஈரானில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது.

‘சுல்பிகார்-கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படகு, புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ்(Zulfiqar-class) என்ற பெயர் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இராணுவ படகு தனது செங்குத்து ஏவுகணை அமைப்பில் இருந்து குறைந்து தூர இலக்குகளை அடையும் நவாப் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது.

அத்துடன் இது உலகின் முதல் வான் பாதுகாப்பு அமைப்பை கொண்ட படகு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் வான் பாதுகாப்பு போர் கப்பல்: ஈரான் வெளியிட்டுள்ள முதல் வீடியோ | Iran World 1St Air Defense Boat Fire Nawab Missile


சுல்பிகார்-கிளாஸ் சிறப்பு

இந்த ஈரானிய சுல்பிகார் வான்-பாதுகாப்பு படகு, டோர் வான் பாதுகாப்பு அமைப்பு போன்ற கடல்-மொபைல் வான் பாதுகாப்பு அமைப்பு போன்றது.
மேலும், படகில் பல செயல்பாட்டு AESA ரேடார் இருப்பதாக ராணுவ பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 Sutton அறிக்கைகளின்படி, செங்குத்து வெளியீட்டு அமைப்பு (VLS) கேபினுக்கு பின்னால் உள்ளது, மேலும் கணிசமான ரேடோம் அதற்கு மேல் உள்ளது. 

ஈரானின் இத்தகைய புதிய வகை படகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை, ஏனெனில் இதுவரை ஒரேயொரு படகு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.