யாழ்ப்பாணம் – கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து, அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியது.
இவ்வாறு சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியை வடமாகாண
ஆளுநர், வடபகுதிக்குப் பொறுப்பான
நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் படைத்தரப்பு என்பன
மறுத்துள்ளன.
உண்மைக்கு புறம்பான செய்தி
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை
மேற்கொண்டதாக தவறான புரிதலை
ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி
ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிப திமாளிகை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியின் உண்மைத்
தன்மை தொடர்பில் சம்பந்தப்பட
அதிகாரிகள் மற்றும் படையினரிடம் வினவியதில் குறித்த செய்தி
உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகின்றது.
கோவில் இருந்த
இடத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்படவில்லை எனவும் அதற்கு அருகில்
தனியாரிடம் சுவீகரிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட காணியிலே
மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் 8 வருடங்களுக்கு முன்னரே
மாளிகை நிர்மாணப்பணிகள் இடை
நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராஜா,
கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில்
எந்த உண்மையும் இல்லை என்றும் திரிபுபடுத்தப்பட்டு தவறான கருத்தை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டிலே இங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆட்சி மாற்றத்துடன் 2015 இல் இந்தப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண
நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திசானாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடற்
படையின் கீழே இந்த மாளிகை மற்றும்
கோவில் உள்ள பிரதேசம் இருந்ததோடு
2022 இல் உத்தியோகபூர்வமாக இந்தப்
பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார
சபைக்கு கையளிக்கப்பட்டதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை
29 ஏக்கர் முழு நிலப்பகுதியில் ஒரு பகுதியிலே மாளிகை அமைந்துள்ளதோடு மாளிகை நிர்மாணிக்கப்பட்ட
பின்னர் கடற்படை அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்திரிகை செய்தி தவறானது
என்றும் இது தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் கோவில் அழிக்கப்பட்டு
மாளிகை கட்டப்படவில்லை என்றும்
குறிப்பிட்டுள்ளார்.