திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை, நாழிக்கிணறு அருகே நேற்று பிற்பகலில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் கிடப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தகவலறிந்து திருச்செந்தூர் கோயில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் வந்து சோதனை செய்தனர். இதில் அது திருவிழாக்களில் பயன்படுத்தும் நாட்டு வெடி என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.
