பிரித்தானியாவில் பல்டியடித்து கொண்டு பட்டம் பெற்ற சீன பெண்: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ


பிரித்தானிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சீன மாணவி ஒருவர் பல்டியடித்து சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்டியடித்த சீன மாணவி

பிரித்தானியாவின் ரோஹாம்ப்டன் பல்கலைக்கழத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடிப்பு மற்றும் நடனப் பயிற்சி துறையில் பட்டம் பெற காத்து இருந்த சீனாவை சேர்ந்த சென் யினிங் (chen yining) பெயர் வாசிக்கப்பட்டது.

தன் பெயர் வாசிக்க கேட்டதும் உற்சாகமடைந்த சீன பெண் திடீரென பல்டியடித்து கொண்டே பட்டம் பெற வந்தார்.

இதனால் ஆச்சரியம், வியப்பும் அடைந்த பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் சீன பெண்ணின் நடவடிக்கை வெகுவாக ரசித்தனர்.

இணையத்தில் வைரல்

இந்நிலையில் பிரித்தானியாவில் பட்டம் பெற பல்டியடித்து கொண்டு வந்த சீன பெண் சென் யினிங்-கின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரித்தானியாவில் பல்டியடித்து கொண்டு பட்டம் பெற்ற சீன பெண்: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ | Chinese Student Celeb Kung Fu Style Graduation Uk

அத்துடன் மாணவி பல்டியடித்து கொண்டு பட்டம் பெற்ற வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை தாண்டி பார்க்கப்பட்டு வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.