ஆலந்தூர்: ஆலந்தூர் 163, 165வது வார்டு திமுக சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு 165வது வார்டு வட்டச் செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். ஆலந்தூர் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், 163வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர். 163வது வட்ட திமுக செயலாளர் அ.வேலவன் வரவேற்றார். விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் 1000 பேருக்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம் பொதுக்குழு உறுப்பினர்கள் எம்எஸ்கே. இப்ராஹிம், ஆர்.டி.பூபாலன், இரா.பாஸ்கரன், கீதா ஆனந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், வட்ட செயலாளர்கள் இ.உலகநாதன், சாலமோன், கே.பி. முரளிகிருஷ்ணன், எம்.ஆர்.சீனிவாசன், ஜெ.யேசுதாஸ், ஜெ.நடராஜன், டி.ரவி, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், ஜி.ரமேஷ், கோ.பிரபாகரன் பெருமாள், ஆர்.பாபு, கே.ஆர்.ஆனந்தன், கிறிஸ்டோபர், பந்தல் கந்தன், அபுதாகீர், கலாநிதி குணாளன், பூவராகவன், கே.விஜய்பாபு, வழக்கறிஞர் வேல்முருகன், டி.ஆர்.எம். மணிகண்டன், கேபிள் ராஜா, கே.கே.சண்முகம் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.