மதுரை: ராமநாதபுரம் அழகன்குளத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா என தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அழகன்குளத்தில் நடத்திய அகழாராய்ச்சி அறிக்கை நிபுணர் குழு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தொல்லியல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கி தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. தீரன் திருமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.