
காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சில வருடங்களாக தமிழில் எந்த படமும் நடிக்காமல் இருந்தார். மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினியின் 'ஜெயிலர்' , சுந்தர். சி யின் அரண்மனை 4 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா நடிகை தமன்னா இருவரும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
இது குறித்து சமீபத்தில் நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் “நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளேன். அதற்குள் இதுபோன்ற வதந்திகளை சில நபர்கள் பரப்பி வருகின்றனர். அதனால் இந்த விஷயத்திற்கு விளக்கமளிக்க அவசியமில்லை. சினிமா உலகில் நடிகர்களை விட நடிகைகள் இதுபோன்று காதல் கிசுகிசுக்களில் சிக்குகிறார்கள். எதனால் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.