லக்னோ :உத்தர பிரதேசத்தில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வைத்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று உ.பி., மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 18 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இதில், ஆறு தேசிய நெடுஞ்சாலைகளை திறந்து வைத்த அமைச்சர், 12 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இவற்றில், குஷிநகர் முதல் நம் அண்டை நாடான நேபாளத்தின் லும்பினி வரை அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை, அப்பகுதியில் அனைத்து புத்த வழிபாட்டுத் தலங்களையும் இணைப்பதால், இது சர்வதேச சுற்றுலாவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, மஹோபா மாவட்டத்தில், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் கட்கரி துவக்கி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement