பிரித்தானியாவின் அதிரடி முடிவு… ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்த சீனா


பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை உறுதி செய்ததையடுத்து ஆத்திரமடைந்த சீனா மேற்கத்திய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயுத குவிப்பை ஊக்குவிக்கும்

பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவின் இந்த முடிவானது இந்திய பசிபிக் பிராந்தியத்தில் ஆயுத குவிப்பை ஊக்குவிக்கும் என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரித்தானியாவின் அதிரடி முடிவு... ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்த சீனா | Furious China Warning West Sunak Secures Deal

@afp

மேலும், முக்கிய அச்சுறுத்தல் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் குற்றச்சாட்டையும் சீனா மறுத்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியா இனி அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பெற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து முன்னெடுத்துள்ள ஒப்பந்தம் உதவும் என்றே கூறப்படுகிறது.

ஆனால், மேற்கத்திய நாடுகள் மிக சாதாரணமாக அணுசக்தி ஒப்பந்தங்களை மீறுவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கொந்தளித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக

சர்வதேச சமூகத்தின் மீதான எந்த அக்கறையும் இன்றி, தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் தவறான மற்றும் ஆபதான பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் அதிரடி முடிவு... ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்த சீனா | Furious China Warning West Sunak Secures Deal

@PA

இந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தமானது ஆயுத குவிப்பை ஊக்குவிக்கும் என்பதுடன், அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் என்றார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான சீனத்து அமைப்பு ஒன்று குறிப்பிடுகையில்,
இது மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பாடு என குற்றஞ்சாட்டியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.