பேருந்து நிலையத்தில் நடந்த திடீர் திருமணம்!! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ


ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஒரு காதல் ஜோடி அவசர அவசரமாக தாலி கட்டிக் கொண்டு பேருந்தில் ஏறி சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அது தொடர்பான மேலதிக தகவல்

திருமணம் என்பது பெரியோர் ஆசிகளுடன் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தீடிரென்று திருமணத்தை நடத்தியுள்ளனர் இளஞ்சோடியினர்.

யாருக்கும் தெரியாமல் திருமணத்தை முடித்துவிட்டு செல்ல நினைத்தவர்கள் தாலி கட்டியவுடன் அவசரமாக பேருந்து ஒன்றில் ஏறி சென்றுள்ளனர்.

பேருந்து நிலையத்தில் நடந்த திடீர் திருமணம்!! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ | A Surprise Wedding At The Bus Station

இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் தனது கையடக்கதொலைப்பேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, தாலி கட்டிய பெண் யார் என்றும் தாலி கட்டிய அந்த இளைஞர் யார் என்றும் ஆம்பூர் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.