நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல்காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.
இந்த வகை காய்ச்சலுக்கு காரணம் H3N2 வைரஸ் தான் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த வகை காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூளிர்காலம் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வகை காய்ச்சலை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் நாளை (மார்ச் 16 தேதி) முதல் மார்ச் 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.