
கிரிமினல் படப்பிடிப்பு நிறைவு
கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‛பத்து தல, 1947 ஆகஸ்ட் 16' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதையடுத்து தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் ‛கிரிமினல்' என்ற படத்தில் நடித்து வந்தார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, மதுரை கதைக்களத்தில் கிரைம் கலந்த படமாக உருவாகிறது. இதில் ஜனனி, தீப்தி, ரவீனா ஆகியோரும் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். கடந்த ஜன., 23ல் படப்பிடிப்பு மதுரையில் துவங்கியது. பின்னர் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதை கவுதம் கார்த்திக், தக்ஷிண மூர்த்தி ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுதொடர்பான போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து மற்ற பணிகளும் அடுத்தடுத்து துவங்க உள்ளன.