காதலியை 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு நாடகமாடிய ஐடி என்ஜினியர்

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் ஆதேஷ். இவர் கேரளாவைச் சேர்ந்தவர்

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா தீமன் (28) என்பவரை டேட்டிங் ஆப் மூலம் ஆதேஷ் சந்தித்துள்ளார். அர்ச்சனா விமானப்பணிப்ப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் ஆதேஷ் வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார்.அர்ச்சனா சமீபத்தில் துபாயில் இருந்து ஆதீஷை சந்திக்க பெங்களூரு வந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை காலை, ஆதேஷின் கோரமங்களா மல்லப்பா ரெட்டி லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இளம்பெண் வந்தார்.

நள்ளிரவு 12 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து அர்ச்சனா கீழே விழுந்து உயிர் இழந்தார். ஆரம்ப கட்ட விசாரணையில் தற்கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக் பெற்றோர் கூறிய புகாரை அடுத்து ஆதேஷை போலீசார் கைது செய்தனர்.அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதிப்பது எளிதல்ல என்பது விசாரனையில் தெரியவந்ததையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆதேஷ் அர்ச்சனாவுடன் தகராறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். சனிக்கிழமை இரவு ஆதேஷும் அர்ச்சனாவும் சினிமா பார்க்கச் சென்றுள்ளனர். பிறகும் இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்பினர். வீடு திரும்பியபோது இருவருக்கும் தகராறு ஏற்படு உள்ளது. தன்னை ஏமாற்றி விட்டதாக அர்ச்சனா கூறி உள்ளார். சண்டையின் போது ஆதேஷ் அர்ச்சனாவை அந்த வாலிபர் பிளாட்டில் இருந்து தள்ளிவிட்டதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.