திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கரும்பியூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ். தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர் பள்ளியில் படிக்கும்போது அவருடன் படித்த மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆகாஷ்ராஜ் பலமுறை தனது காதலை அந்த மாணவியிடம் வெளிப்படுத்தியும் அதற்கு அந்த மாணவி ஒத்துக் கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ்ராஜ் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வேறொரு அரை நிர்வாண பெண்ணின் உருவத்துடன் பொருத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்ட ஆகாஷ்ராஜை கைது செய்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து ஆகாஷ்ராஜிடம் விசாரணை செய்த போது, மாணவி காதலிக்க மறுத்ததால் அந்தக் கோபத்தில் இவ்வாறு பதிவிட்டதாக தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் மாணவர் ஆகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.