வேலப்பன்சாவடியில் திமுக இளைஞரணி சார்பில் 1000 மாணவர்களுக்கு சீருடை ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வேலப்பன்சாவடியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 1000 மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை, ஸ்டீல் வாட்டர் பாட்டில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு, மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார்.

நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பவுல், நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.சங்கர், நிர்வாகிகள் வெ.குமாரசாமி, அ.க.நடராஜ், ஜெ.சரவணன், செல்வதுரை, பாண்டுரங்கன், க.சாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மத்திய மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,  1வது முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை, ஸ்டீல் வாட்டர் பாட்டில் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், மாநில மாணவரணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ், பா.பன்னீர்செல்வம், பி.வி.கே.கண்ணண், பி.ஜெகன், பி.உமாபதி, பு.பரிசமுத்து, டி.வி.இளங்கோவன், ரங்கதுரை, மா.விநாயகம், காஞ்சனா இளையராஜா, சாந்திராஜா, விக்னேஷ்வரன், என்.ராஜீ, ஆ.நாராயணன்,  பக்தவச்சலம், ஆனந்த், வரதராஜ், கணேஷ், கார்த்தி, மகேஷ், அமீர், அப்பு, குமார், மணி, தருண், ஹரி, ரோஸ்குமார், சு.கண்ணன், பி.ஏழுமலை, விஜி, சந்தோஷ்குமார், சுரேஷ், லோகநாதன், ஜெ.சங்கர், பரத், கார்த்திக், க.ஜெகன், பழனி, பி.ஜெகன், ஜஸ்வந்த்ரோஸ், பூபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.