Leo update: லியோவில் இவரும் வில்லனாமே: இன்னும் எத்தன வில்லன் தான் லோகி?

மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் லியோ. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துக் கொண்டு காஷ்மீருக்கு கிளம்பிவிட்டது படக்குழு.

லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்து வருகிறார் த்ரிஷா. கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் கெத்து காட்டிய ஏஜெண்ட் டீனாவும் லியோ படத்தில் இருக்கிறார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் மேனன் என ஒரு வில்லன் பட்டாளமே இருக்கிறது. இது போதாது என்று வில்லத்தனம் செய்வதற்கு பெயர் போன மதுசூதன் ராவை அழைத்து வந்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

என்ன தான் லோகேஷ், உங்களின் கணக்கு?. எத்தனை வில்லன்கள் வந்தாலும் தளபதி அசால்டாக சமாளிப்பார் தான். ஆனால் அந்த வில்லன்கள் உங்கள் படத்தில் வருவதால் தான் பயமே. மாஸ்டரில் விஜய் சேதுபதி எனும் ஒரேயொரு வில்லனை வைத்தே ஹீரோவை ஆட்டம் காண வைத்துவிட்டீர்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனால் தான் லியோவில் வில்லன்கள் பட்டியல் நீண்டு கொண்டே போவது லைட்டா பயமாக இருக்கிறது. இன்னும் எத்தனை பேரை தான் வில்லனாக நடிக்க வைக்கப் போகிறீர்களோ. தளபதி பாவம். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க லோகி என தெரிவித்துள்ளனர்.

லியோ படத்தின் கதை லோகேஷின் எல்.சி.யூ. கதை ஆகும். அதனால் லியோவில் சர்பிரைஸாக ரோலக்ஸ் சாரை நடிக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் கசிவது வழக்கமாகிவிட்டது. எனவே, லியோவில் ரோலக்ஸ் சார் இருந்தால் படம் ரிலீஸாவதற்கு முன்பு புகைப்படம் நிச்சயம் கசிந்துவிடும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையே விஜய்யையும், சூர்யாவையும் சேர்த்து திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாகவும் இருக்கிறார்கள். லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

லியோ படத்தில் விஜய், த்ரிஷா தம்பதியின் மகளாக நடிக்கிறார் பிக் பாஸ் 6 புகழ் ஜனனி என கூறப்படுகிறது. வில்லன்கள் த்ரிஷாவையும், ஜனனியையும் கொலை செய்துவிடுவார்கள். அதற்காக விஜய் பழிவாங்குவதே கதை என்று ரசிகர்கள் அவ்வப்போது கூறி வருகிறார்கள்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. காஷ்மீர் ஷெட்யூலில் தான் கலந்து கொண்டிருக்கிறார்.

அவர் காஷ்மீருக்கு வந்தபோது விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார்கள். அதிலும் சஞ்சய் தத் அருகில் சந்தோஷமாக சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தார் த்ரிஷா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, உங்களை போட்டுத்தள்ள தான் சஞ்சய் தத்தை அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ் என்பது கூட தெரியாமல் இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே த்ரிஷா என்றார்கள்.

Sai Pallavi, Leo: அஜித்தின் துணிவை அடுத்து விஜய்யின் லியோ படத்திலும் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

முதல் காட்சியிலேயே த்ரிஷாவை கொலை செய்வது போன்று தான் காட்டுவார் லோகேஷ் கனகராஜ் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே விஜய்யின் மனைவியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் கேட்டதாகவும், இது வெயிட் இல்லாத கதாபாத்திரம் என்று கூறி அவர் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.