கர்ணன் படத்தில் நடித்த குதிரைக்கார சிறுவன் காளி : இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் மிக சில காட்சிகளிலே வந்திருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரங்களில் ஒன்று தான் குதிரைக்கார சிறுவன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடித்த காளி என்ற சிறுவன் அசல் கிராமத்து சிறுவனாக தனுஷுக்கு தெனாவெட்டாக பதில் சொல்லும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் அடியை தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறிவிழுந்து கர்ணனை கூப்பிட செல்லும்போதும் தத்ரூபமாக நடித்திருப்பார்.

கர்ணன் படத்தில் நடித்ததற்காக சிறுவன் காளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதன்பிறகு ஊடக வெளிச்சத்தில் பெரிதாக தலைக்காட்டாத காளியை ஒருவர் பேட்டி எடுத்துள்ளார். அதில், கர்ணன் படத்தில் வாங்கிய சம்பள பணம் முழுவதையும் தனது சகோதரி மகளின் சடங்கிற்கு செலவழித்துவிட்டதாகவும், தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அந்த பேட்டியானது சோஷியல் மீடியாவில் பரவ, சிறுவன் காளிக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும் எனவும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனவும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.