யாரு அதிமுக? ஓபிஎஸ் முடிக்கும் போது ஷாக்… கை நீட்டிய எடப்பாடி… அடுத்த நடந்த களேபரம்!

தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று மீண்டும் ஒருமனதாக நிறைவேறியது. ஏற்கனவே கடந்த ஆண்டு அனுப்பி வைத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் காலாவதியானது. இந்நிலையில் மீண்டும் மசோதா நிறைவேற்றி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கவுள்ளனர். இதுதொடர்பான விவாதத்தின் போது

பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

இதையடுத்து அவர் பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இந்த மன்றம் விவாதமின்றி ஒருமனதாக ஏகமனதாக நிறைவேற்றி இருக்கலாம் என்ற கருத்தை பதிவு செய்தேன். ஆனால் இங்கே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றிருக்கிறது. இருப்பினும் முதல்வர் கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அதிமுக சார்பில் முழுமையாக நாங்கள் வரவேற்று அமர்கிறேன்’ என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் பேச்சால் சலசலப்பு

கடைசியாக ’அதிமுக சார்பில்’ எனப் பேசியதை கேட்டதும் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வந்தது. உடனே கையை நீட்டி இதையெல்லாம் ஏற்க முடியாது என்று கூறினார். உடனே அவர் எழுந்து பேசுகையில், ஒரு கட்சிக்கு ஒருவர் வீதம் பேச அழைத்தீர்கள். அதிமுக என்பது என்னுடைய அணி தான். நான் தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன்.

எடப்பாடி பதிலடி

எங்களின் சார்பில் உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசினார். அதன்பிறகு ஏன் இப்படி பேச அழைத்தீர்கள்? பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்குள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் அவையில் எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு நோக்கி காரசாரமாக கேள்விகளை எழுப்பினர்.

சபாநாயகர் விளக்கம்

பின்னர் பதிலளித்த சபாநாயகர், ’முன்னாள் முதல்வர் என்ற வகையில் பேச அனுமதி கேட்ட போது, நீங்கள் பேச முடியாது எனக் கூற முடியாது என்றார். உடனே எடப்பாடி எழுந்து, இதெப்படி நியாயம்? என்னைப் பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் நடக்கிறது. அதற்கு சபாநாயகர் அப்பாவு, ’பிரதான எதிர்க்கட்சி தலைவர்

தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

இருதரப்பும் மோதல்

அவர் கருத்தையும் பதிவு செய்துள்ளார். உங்கள் கருத்தையும் பதிவு செய்திருக்கிறீர்கள். இது முக்கியமான மசோதா’ என்று பேசி சமாதானம் செய்ய பார்த்தார். இதற்கிடையில் மனோஜ் பாண்டியன் எழுந்து, ’ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர். அவர் பேசத் தான் செய்வார்’ என்று இருக்கையில் இருந்து எழுந்து வந்து காரசாரமாக பேசினார்.

கே.பி.முனுசாமி சமாதானம்

கூடவே வைத்திலிங்கமும் வாக்குவாதம் செய்தார். அதற்கு எடப்பாடி தரப்பில் பலரும் எழுந்து பதிலுக்கு பதில் பேசினர். அவர்களை கே.பி.முனுசாமி எழுந்து வந்து சமாதானம் செய்தார். கடைசியில் எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்டப் பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.