சென்னை: ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். எங்கள் தாய்மொழியை தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும், இந்தித் திணிப்பு முயற்சியை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
