போலி மருந்துகளைத் தயாரித்ததற்காக நாடு முழுவதும் 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
போலியான மருந்துகளைத் தயாரிப்பது தொடர்பாக தமிழ்நாடு உள்பட 20 மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான மரியன் பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று மூத்த ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.