மந்திரவாதி காதலனை விட்டுவிடு..! மகளை எச்சரித்த பெற்றோர்: இறுதியில் நேர்ந்த சோகம்

பிரேசிலில் மந்திரவாதி என சொல்லிக் கொள்ளும் காதலன் ஒருவன், 21 வயது இளம்பெண்ணை கொன்று டிரம்மில் வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கொலை

லைலா விட்டோரியா ரோச்சா ஒலிவேரா(Laila Vitoria Rocha Oliveira) என்ற 21 வயது இளம்பெண் சில மாதங்களுக்கு முன்பு தனது காதலனான ஆண்ட்ரே அவிலாவை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் பிரேசிலின் Parauapebas-ல் இருந்து வந்த ரோச்சா ஒலிவேரா, மார்ச் 25ம் திகதி Rio Grande do Sul மாநிலத்தின் Porto Alegreல் உள்ள காதலன் ஆண்ட்ரே அவிலாவின் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மந்திரவாதி காதலனை விட்டுவிடு..! மகளை எச்சரித்த பெற்றோர்: இறுதியில் நேர்ந்த சோகம் | Woman Killed Burned In Drum By Wizard Boyfriend Jam Press

முதலில் கொலை நடந்ததாக கூறப்படும் இரவில் அலறல் மற்றும் பலத்த சத்தம் கேட்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள்,  எரியும் டிரம்மில் பாதிக்கப்பட்டவரின் உடல் கருகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் பல காயங்கள் மற்றும் அவரது வயிற்றில் ஒரு பெரிய கத்திக்குத்து காயம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மந்திரவாதி காதலனை விட்டுவிடு..! மகளை எச்சரித்த பெற்றோர்: இறுதியில் நேர்ந்த சோகம் | Woman Killed Burned In Drum By Wizard Boyfriend Jam Press

விக்டர் சமேதி என்ற பெயரைப் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வரும் ஆண்ட்ரே அவிலா, அதில் பிசாசு, மண்டை ஓடுகள், வாள்கள் மற்றும் இறந்தவர்களுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின் படங்களை அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும் ஆண்ட்ரே அவிலா தன்னை ஒரு மந்திரவாதி என்றும் பல நேரங்களில் வெளிகாட்டி வந்துள்ளார்.  

எச்சரித்த பெண்ணின் பெற்றோர்

இளம் பெண் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு அடுத்த நாளே தெரியவந்துள்ளது.

மந்திரவாதி காதலனை விட்டுவிடு..! மகளை எச்சரித்த பெற்றோர்: இறுதியில் நேர்ந்த சோகம் | Woman Killed Burned In Drum By Wizard Boyfriend Jam Press

இதையடுத்து ரோச்சா ஒலிவேரா-வின் தாயார் உள்ளூர் ஊடகத்திடம் வழங்கிய தகவலில், ஒலிவேரா 2 மாதங்களுக்கு முன்பு போர்டோ அலெக்ரே-வுக்குச் சென்று, தன்னை “மந்திரவாதி” என்று அழைத்துக் கொண்ட ஒருவருடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார்.

இது தொடர்பாக தனது மகளை கவனமாக இருக்குமாறும், அந்த ஆணுடனான உறவைப் பற்றி சிந்திக்குமாறும் எச்சரித்ததாக தெரிவித்துள்ளார்.

மந்திரவாதி காதலனை விட்டுவிடு..! மகளை எச்சரித்த பெற்றோர்: இறுதியில் நேர்ந்த சோகம் | Woman Killed Burned In Drum By Wizard Boyfriend Jam Press

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.