ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி


ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், கார் பார்க்கிங் செய்யச் சென்ற ஒருவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது.

அதிரவைத்த காட்சி

ஜேர்மனியிலுள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில், அதிகாலை 3.00 மணியளவில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற ஒருவர் காலில் ஏதோ இடறியுள்ளது. தன் காலில் பட்ட பொருள் என்னவென்று பார்த்த அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், அது ஒரு ஆணின் உயிரற்ற உடல்.

பதற்றத்துடன் அவர் அங்கிருந்து நகர முயல, சற்று தள்ளி, கார் ஒன்றின் முன் ஒரு பெண்ணின் உடலும் கிடக்கவே, உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி | Man Goes To Car Park At German Airport

Credit: Getty

கிடைத்த முக்கிய தடயம்

பொலிசார் உடனடியாக அங்கு விரைந்து அந்த உடல்களை அங்கிருந்து மீட்டுள்ளார்கள். அந்த ஆணுக்கு 47 வயது என்றும், அந்தப் பெண்ணுக்கு 50 வயது என்றும் கூறியுள்ள பொலிசார், அவர்களை அடையாளம் காணும் முயற்சியைத் துவக்கியுள்ளார்கள்.

இதற்கிடையில், அந்த ஆணின் அருகே துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. ஆகவே, அவரே குற்றவாளியாக இருக்கக்கூடும் என பொலிசார் கருதுகிறார்கள்.
உயிரிழந்த இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களா என்பது தெரியவில்லை.

பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.