அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆதர்ஷ சிற்பி’ கவிதை, கட்டுரை போட்டிகளுக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான எழுத்தாளர்கள் தமது படைப்புகளை நாடு முழுவதிலுமிருந்து ஆர்வத்துடன் அனுப்பி வைத்துள்ளார்கள். அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
படைப்புகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு பரிசுக்குரியவை தேர்ந்தெடுக்கப்படும். வெற்றியாளர்களின் முகவரிக்கு இது சம்பந்தமான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். கட்டுரைப் போட்டிக்கான பரிசு தொகையாக முதலாமிடம் 25,000 ரூபா, இரண்டாமிடம் 15,000 ரூபா, மூன்றாமிடம் 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. கவிதைப் போட்டிக்கான பரிசு தொகையாக விபரங்கள் முதலாமிடம் 15,000 ரூபா, இரண்டாமிடம் 10,000 ரூபா, மூன்றாமிடம் 7,500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு பணப்பரிசுடன் சான்றிதழ்களும், நினைவுச் சின்னமும் வழங்கப்படுவதுடன், ஆக்கங்கள் தேசிய பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படும்.
இதேவேளை பங்கு பற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆக்கங்களை அனுப்பியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
மேலும், விழா சம்பந்தமான விபரங்கள் உரிய காலத்தில் ஊடகங்கள் மூலமும், கடிதங்கள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு,
போட்டி ஏற்பாட்டாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இல 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07.
071-6876548 / 070-4329131 தொடர்புக்கொள்ளவும்.