பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்: 8 பேர் கைது| 8 Arrested Over Posters Against PM In Gujarat’s Ahmedabad: Report

ஆமதாபாத்: குஜராத்தில், பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 8 பேரை ஆமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

டில்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆம் ஆத்மியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கெஜ்ரிவாலை கண்டித்து டில்லியில் பாஜ.,வினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

இச்சூழ்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போஸ்டர்களை ஒட்டும் பணியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில், இந்த விவகாரம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ள ஆமதாபாத் போலீசார், போஸ்டர்களில் ஆட்சேபனைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் இசுதுன் காத்வி, பா.ஜ., சர்வாதிகாரம் செய்கிறது. அக்கட்சிக்கு பயம் வந்துள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.