சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று (31) காலை 6.30 மணிக்கு ஹாமில்டனில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.
இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.
இதனால் நியூசிலாந்து அணி 3 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.