Ponniyin Selvan 2: மணிரத்னம் ஒத்துவர மாட்டார், வேண்டாம்: லைகா சுபாஸ்கரனிடம் கூறிய அமைச்சர் துரைமுருகன்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களோ இதெல்லாம் படமாக்க முடியாது. அது மணிரத்னத்தால் சத்தியமாக முடியாது என்றார்கள். பொன்னியின் செல்வன் வரலாற்று தோல்வி அடைந்த படமாகப் போகிறது என்றார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படம் ரூ. 500 கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14ம் தேதி டிவியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு சுவாரஸ்யமாக பேசினார்.

நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது,

ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவுக்கு படமாக்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் படிக்கின்ற காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலை 5 முறை படித்துள்ளேன்.

பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறோம் என சுபாஸ்கரன் என்னிடம் சொன்னார். கதையை படித்திருக்கிறீர்களா என நான் அவரிடம் கேட்டேன். இல்லை என்று பதில் அளித்தார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த கதையை நீங்கள் படமாக எடுக்காதீர்கள் என்றதற்கு எடுத்தே தீருவேன் என்றார் சுபாஸ்கரன்.

கதையை படமாக்குவது எளிது ஆனால் காவியத்தை படமாக்குவது கடினம் என்றேன். சரி, படத்தில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக் கொண்டேன்.

இயக்குநர் யார் என்று கேட்டதும் மணிரத்னத்தின் பெயரை சொன்னார். அவர் இருட்டிலயே படம் எடுப்பாரே. இந்த கதைக்கு சரிபட்டு வர மாட்டார், வேண்டாம் என்று கூறினேன். ஆனால் படம் பார்த்த பிறகு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் அடித்தேன்.

வந்தியத்தேவனாக கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். என் தொகுதிக்குட்பட்ட ஊர் தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு சந்தோஷம்.

Kamal Haasan:மணிரத்னத்தை பார்த்தால் பொறாமையா இருக்கு: கமல் ஹாசன்

கமல் ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என்கிற பெயர் கொடுத்தார். திரையுலகில் அவருக்கு இணையானவர் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை என்றார்.

துரைமுருகன் பேசியதை கேட்ட ரசிகர்களோ, அடடே வந்தியத்வேனுக்கும் அமைச்சருக்கும் இடையே இப்படி ஒரு தொடர்பா என வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Rajinikanth:ரஜினி மீது கோபம்: பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு தலைவரை அழைக்காத மணிரத்னம்?

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. அவரை மணிரத்னம் அழைக்கவில்லை என தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் கிடையாது. ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் பொன்னியின் செல்வன் 2 பட நிகழ்ச்சியில் ரஜினியால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.