சென்னை : நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது சூர்யா 42 படம். படத்தை சிவா இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா, வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார்.
சூர்யாவின் சூர்யா 42 படம்
நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது சூர்யா 42. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் மிரட்டலாக அமையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிரட்டிய மோஷன் போஸ்டர்
முன்னதாக படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, வரலாற்று பின்னணியில் படம் உருவாகவுள்ளதை ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது. கமர்ஷியல் படங்களாக எடுத்துவரும் சிவா இயக்கத்தில் இப்படியொரு படமா என்று அனைவரையும் இந்த மோஷன் போஸ்டர் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்னமும் அந்த ஆச்சர்யம் ரசிகர்களிடையே மெயின்டெயின் ஆகி வருகிறது. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இந்த ஆண்டிற்குள் படம் ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி வந்தாலும் அடுத்ததாக வாடிவாசல்தான் என்று அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. சூர்யா 42 படத்தில் நடித்து வந்தாலும் இடையில், வாடிவாசல் படத்திற்காக மாடுகளுடன் பயிற்சி உள்ளிட்டவற்றையும் செய்து வருகிறார் சூர்யா.

தள்ளிப் போகும் சூட்டிங்
இந்தப் படம் நீண்ட நாட்களாக சூட்டிங்கிற்காக வெயிட் செய்து வருகிறது. விடுதலை படத்தின் சூட்டிங்கில் வெற்றிமாறன் பிசியான நிலையில், சூர்யாவும் தன்னுடைய படங்களில் பிசியானதால் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போனது. இந்நிலையில் விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தாணுவும் இந்த விஷயத்தை தற்போது தன்னுடைய பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாடிவாசல் குறித்து தாணு அப்டேட்
தம்பி சூர்யாவும் இயக்குநர் வெற்றிமாறனும் இணையும் வாடிவாசல் படம் உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல் என்று தாணு கூறியுள்ளார். இந்த வருடத்திலேயே ரசிகர்களின் எண்ணம் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர்கள் அனைவரும் உச்சி முகரும் படைப்பாக வாடிவாசல் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் கூறுவது போல இந்தப் படத்தை உச்சி முகரும் தருணத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.